மாத்தளை, குருநாகல், மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
All Stories
இலங்கையில் கொவிட்-19 பரவல் ஆரம்பம் முதல், நாளொன்றில் அதிகளவான நோயாளர்கள் நேற்று பதிவாகினர்.
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியர்களை இலங்கையில் தனிமைப்படுத்துவது தொடர்பிலான விளம்பரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்படப்போவது இலங்கை மக்கள். இதற்கு யார் பொறுப்புகூறுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கை பொலிஸ் சேவையில், பயிலுனர், கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிலுனர் மகளிர் கான்ஸ்டபிள்கள் முதலான பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அரச கரும மொழிகள் திணைக்கத்தினால் நடத்தப்படவிருந்த மொழித்திறன் (பேச்சு) விருத்தித் தேர்வு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சேவை ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிக்கு சமூகமளிக்கும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாக பொது நிருவாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மாதாந்த வேதனம் உரிய தினத்தில் வழங்கப்படவில்லை என தெரிவித்து அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்கள் குழுவொன்று, அதன் தலைவரை அவரது உத்தியோகப்பூர்வ அறையில் இன்று மதியம் தடுத்து வைத்திருந்தது.
இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
பின்னர் வேதனத்தை உரிய தினத்தில் வழங்குவதாக, கூட்டுத்தாபன தலைவர், வாக்குறுதியளித்ததை அடுத்து, சேவையாளர்கள் அவரை விடுவித்துள்ளனர். அத்துடன், நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது
காலி மாவட்டத்தின் ரத்தகம பொலிஸ் பிரிவில் உள்ள இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய கிராமசேவகர் பிரிவு இன்றிறவு 8.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளது என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் பணி நிமித்தம் நேற்று (27) வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் 2020/21ம் ஆண்டு பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிக்கும் செல்லுபடியானதாக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் பொது சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
·கூட்டு ஒப்பந்தம் தற்போது இல்லை என்பதால், பெருந்தோட்ட நிறுவனங்கள் சில தொழிலாளர்களுக்குத் தேவையற்ற அழுத்தங்களை வழங்குவதாகத் தெரிவித்த பெருந்தோட்டத் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் வட மேல் மாகாண பாடசாலைகளை எதிர்வரும 30ம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி. எல் பீரி்ஸ் அறிவித்துள்ளார்.