நாட்டில் பயணக்கட்டுபபாடுகள் விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அறியத் தந்து தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான மாவட்டரீதியில் அவசர அழைப்பு மையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
All Stories
மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக கண்டி, குருணாகல மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பிப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் 11 இலட்சம் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ப்ளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் முதலானவற்றினை தடைசெய்யும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, ப்ளாஸ்ரிக் போத்தல்களில் அடங்கியுள்ள பானங்களை கொள்வனவு செய்யும்போது, வைப்புப் பணம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இன்றிரவு (13) 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி முதல், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு மாறாக, வீடுகளில் இருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் இன்று (13) முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் வேலை திட்டத்திற்காக பயிலுனர்களை கட்டாயப்படுத்தி அழைப்பதை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு நிரந்தர கொடுப்பனவு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துமாறு தொழிலற்ற பட்டதாரிகளின் ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் இணைப்பாளர் மஹேஷ் அம்பேபிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார்.
கொத்மலை தனியார் ஆடைத்தொழிற்சாலையில் 69 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.