அட்டன் பொகவந்தலாவ, பொகவான, குயினா தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (08) அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுத்தனர்.
All Stories
அடிப்படை சம்பளம் 900 ரூபாய் வரவு செலவு திட்ட நிவாரணம் 100 ரூபாயை சேர்த்து ஆயிரம் ரூபாய் நாட்சம்பளத்தை வழங்கும்படி முதலாளிமார் சம்மேளனம் சகல தோட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
நாட்டின் சுபீட்சத்தின் அடையாளமாகக் காணப்படும் தேயிலை கைத்தொழிலை வீழ்ச்சியடைய இடமளிக்காது பலமுடன் முன்னோக்கி செல்வதற்காக தேயிலை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இத்துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவாக வழங்க தவறும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இம்மாத சமபளத்துடன் பெருந்தோட்ட தொழிலார்களுக்கு ரூபா 1000 சம்பளம் கிடைக்கும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருக்கின்றமை இ.தொ.கா விற்கு கிடைத்த வெற்றியாகும் என அதன் பொதுச் செயலாளரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை நூற்றுக்கு 25 சதவீதம் உயர்த்துவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை ஊழியர்களில் 90 வீதமானவர்கள் நாளை (08) கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்று சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத் தீர்மானம் குறித்து வௌியான வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்க கூறி தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான விசாரணையின் போது பிரதிவாதிகளான தொழிலமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினரை விடயங்களை முன்வைக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
பொதி பணிகளை விநியோகித்தல் இன்று (07) தொடக்கம் இடைநிறுத்த ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என்று இலங்கை ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III இன் பதவியொன்றுக்கு நியமனம் செய்தல் தொடர்பான அறிவித்தலை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.