'இந்தியர்களுக்கு இலங்கையில் தனிமைப்படுத்தல் வசதி' -அ இதற்கு யார் பொறுப்பு?

'இந்தியர்களுக்கு இலங்கையில் தனிமைப்படுத்தல் வசதி' -அ இதற்கு யார் பொறுப்பு?

இந்தியர்களை இலங்கையில் தனிமைப்படுத்துவது தொடர்பிலான விளம்பரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்படப்போவது இலங்கை மக்கள். இதற்கு யார் பொறுப்புகூறுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்தியர்கள் சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதாயின் வேறு நாடொன்றில் தனிமைப்படுத்தப்படுத்தில் ஈடுபடவேண்டும்ட. இதனை அடையாளங்கண்ட இலங்கை வர்த்தகர்கள் சிலர் மற்றும் சிவில் விமானசேவை அதிகாரசபையின் பிரதான அதிகாரியொருவர் ஆகியோர் இதனை வியாபாராமாக செயற்படுத்த முயன்றுள்ளனர். இதற்கு பலிகடாக்களாவது இலங்கை மக்களே. இதனை யார் பொறுப்பெடுப்பர்?

குறித்த நிறுவன ஊழியர் ஒருவருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையும் எம்பி ஊடகவியலாளர் சந்திப்பில் வௌியிட்டார்.

இது தொடர்பில் இலங்கையின் பிரபல ஊடகமான அத தெரண சிவில் விமான சேவை அமைச்சர் டி.வி சானக்கவிடம் வினவியபோது 'சிவில் விமானசேவைக்கு இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. இது தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும். தனிமைப்படுத்தலுக்கு என்று விசேட வசதிகள் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (27)சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை தவறாக பயன்படுத்தி வௌிநாட்டுப் பிரஜைகளை இலங்கையில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பான செயற்பாடு இடம்பெறுகிறதா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் டொக்டர் நவீன் டி சொய்சா மேலும் தெரிவித்தார்.

அத தெரண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image