அரச ஊழியர்களின் பணி குறித்த அறிவுறுத்தல் பயிலுநர் பட்டதாரிகளுக்கும் உரித்தானதா?

அரச ஊழியர்களின் பணி குறித்த அறிவுறுத்தல் பயிலுநர் பட்டதாரிகளுக்கும் உரித்தானதா?

அரச ஊழியர்களின் பணி நிமித்தம் நேற்று (27) வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் 2020/21ம் ஆண்டு பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிக்கும் செல்லுபடியானதாக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் பொது சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் கொவிட் 19 தொற்றல் அதிகரிப்பை கவனத்திற்கொண்டு அரச ஊழியர்கள் கிழமைக்கு இரு நாட்கள் விடுமுறை கழிக்கப்படாதவகையில் விடுமுறை எடுக்க முடியும் நேற்று (27) வௌியிட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் 2020 மற்றும் 2021ம் ஆண்டு பயிலுநர் பட்டதாரிகளாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்குமானது என நாம் நம்புகிறோம்.

குறிப்பாக கடந்த காலங்களில் உங்களது அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பட்டதாரி பயிலுநர்களுக்கும் உரியதாக காணப்படவில்லை. அவை தொடர்பில் அவ்வவ்சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியிருந்தோம். இன்றைய சூழ்நிலையில் சுகாதாரதுறையில் பயிற்சி பெறும் பயிலுநர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சேவையாற்றுவதாக எமக்கு தகவல் கிடைத்த வண்ணமுள்ளது. இதுவொரு பாராதூரமான நிலைமையாகும்.

இவ்விடயம் தொடர்பில் செயலாளர் உனடியாக கவனம் செலுத்துமாறும் குறித்த சுற்றுநிரூபம் பயிலுநர் பட்டதாரிகளுக்கும் உரியதானதாக அனைத்து நிறுவன பிரதானிகளுக்கு தெரியப்படுத்துமாறும் கோருகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image