வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்று (19) மீண்டும் திருத்தப்பட்டு வௌியிடப்பட்டுள்ளன.
All Stories
வௌிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்கள் கொவிட் 19 தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகப்பூர்வ இணையதளமான www.slbfe.lk இற்கு பிரவேசித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வௌிநாடுகிளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முழமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வௌிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று வௌ்ளை மாளிகை தகவல்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கை உட்பட நான்கு ஆசிய நாடுகளில் இருந்து டுபாய் திரும்பும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முதல் ரபிட் பிசிஆர் (rapid PCR) பரிசோதனை செய்து எதிர்மறை அறிக்கை வைத்திருப்பது கட்டாயம் என்று டுபாய் பட்ஜட் கெரியர் ப்ளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரான்சில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு 'சுகாதார பாஸ்' நடைமுறைப்படுத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (09) அதிகாலை இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 50,000 ரூபா உதவித் தொகை வழங்குதாக இணையதளங்களில் வௌியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
காலாவதியான வதிவிட வீசாவுடன் உள்ள வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குவைத் இணைந்த அமைச்சவைக் குழு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தற்போது வௌிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நாளை (08) தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ம் திகதி வரையான ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள உயர் கட்டுப்பாடுகளால் தொழிலாளர் சந்தை மேம்பாட்டுக்கு தடையாக விளங்கக்கூடும் என கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.