முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அமெரிக்கா செல்லாம்!
முழமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வௌிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று வௌ்ளை மாளிகை தகவல்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கட்டம் கட்டமாக வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நாட்டுக்குள் நுழையவிருக்கும் அனைத்து நாட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி (2 டோஸ்கள்) செலுத்தியிருப்பது கட்டாயம் என்றும் வௌ்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட காலப்பகுதி தொடர்பில் எவ்வித அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.