டெல்டா திரிபு வைரஸ் பரவலுடன் கொவிட் 19 நான்காம் அலை மிக வேகமாக ஆரம்பிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக போர்த்துக்கல் அச்சம் வௌியிட்டுள்ளது.
All Stories
உலகின் மிகப் பெரிய பிசிஆர் பரிசோதனைக் கூடத்தை டுபாய் அதன் விமான நிலையத்தில் நிறுவியுள்ளது.
இரண்டாம் நுழைவாயிலுக்கு அண்மித்து 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடம் திறக்கப்படவுள்ளது
உலக சுகாதார தாபனத்தின் புதிய தரத்திற்கமைய நவீன உபகரணங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்கூடத்தில் ஒரு நாளைக்கு 100,000 இலட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்து சில மணி நேரங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகள் காணப்படுகிறது என டுபாய் விமான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாய் விமான நிலையம் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து திறக்கப்படவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது.
மேலும் குறித்த ஆய்வுகூடத்தில் நேர்எதிர் மற்றும் நேர்மறை அழுத்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவை நேரடியாக அரச அறிவிப்பு தளங்களுடன் தொடர்புபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறைக்கு அப்பால் உலகின் மிக பரப்பபரப்பான வர்த்தக போக்குவரத்து மையமாக காணப்படும் டுபாய் விமானநிலையத்தை பாதுகாப்பான போக்குவரத்துக்கு உகந்ததாகவும் சுகாதார வழிமுறைகளுக்கு உகந்ததாகவும் மாற்றியமைக்கபபடுவதே நோக்கம் என விமான நிலையத் தலைவர் ஷீக் அஹமட் பின் ஷஹீட் அல் மக்டோம் தெரிவித்தார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் ஒன்லைன் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
வௌிநாடுகளில் பணியாற்றிய நிலையில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுக் கடிதம் மற்றும் தொழில்வழங்குநர்களினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்பன அவரவர் குடும்ப உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டது என்று வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் சுங்கச் சட்டங்களுக்கமைய இந்தியர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 100,000 இந்திய ரூபா (Dh4,945) பெறுமதியான தங்க நகைகளை தம்மோடு எடுத்துச் செல்ல முடியும்.
மலபார் குழுமத்தின் தலைவர் எம் பி அஹ்மட் வழங்கிய தகவல்களுக்கமைய, தெற்காசிய சுங்கச் சட்டங்களுக்கமைய, ஒரு வருடங்களுக்கு மேல் வௌிநாட்டில் தங்கியிருக்கும் ஆண் ஒருவர் 50,000 இந்திய ரூபா பெறுமதியான தங்க நகைகளை தம்மோடு கொண்டு கொண்டு செல்ல முடியும். பெண் பயணி 100,000 இந்திய ரூபா (Dh4,945) தங்க நகை நகைகளை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிட்டத்திட்ட 3.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்கத்திற்கு பிரபலமான 'தங்க நகரம்' என்றழைக்கப்படும் டுபாயில் தங்க நகைகளை கொள்வனவு செய்யவே விரும்புகின்றனர். மேலும் இந்தியாவில் இருந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் சுற்றலாப்பிரயாணிகளாக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் போது தங்கம் வாங்கவென்றே டுபாய் செல்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய தங்க சந்தைகளில் ஒன்றான இந்தியா, உலகில் முன்னணி தங்க மையமாக தன்னை மாற்றுவதற்காக பெறுமதியான உலோகங்களிலான நகைகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட ஆபரணங்களுக்கான கட்டாய அடையாளத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உட்பட 7 நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான தடையை எதிர்வரும் ஜூன் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஹாரி ரோக் நேற்று (16) அறிவித்துள்ளார்.
ஜூலை மாதம் தொடக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதி வரை வௌிக்கள பணிகள் அனைத்துக்கும் பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
வௌிநாடுகளில் உள்ளவர்கள் அங்கிருந்து புதிய வேலைகளை தெரிவு செய்யும் நோக்கில் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை அங்குள்ள நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய இப்பதிவை நாம் எமது இணையதளத்தில் பகிர்ந்துள்ளோம்!
இலங்கை உட்பட 5 நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு கொரியாவுக்கான தொழில்வாய்ப்புக்கு தெரிவான 3,500 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள், தொழில்வாய்ப்புக்காக அந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.