இலங்கையர்கள் டுபாய் செல்வதானால்..

இலங்கையர்கள் டுபாய் செல்வதானால்..

இலங்கை உட்பட நான்கு ஆசிய நாடுகளில் இருந்து டுபாய் திரும்பும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முதல் ரபிட் பிசிஆர் (rapid PCR) பரிசோதனை செய்து எதிர்மறை அறிக்கை வைத்திருப்பது கட்டாயம் என்று டுபாய் பட்ஜட் கெரியர் ப்ளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

டுபாய் சிவில் விமானசிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தீர்மானங்களுக்கு அமைய இவ்வறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கு முதல் அனைத்து விமான சேவைகளும் விமானத்தில் ஏறுவதற்கு முதல் 4 மணி நேரத்திற்கு முதல் ரெபிட் பிசிஆர் பரிசோதனையை செய்து எதிர்மறையான முடிவை பெற்றிருத்தல் வேண்டும் அறிவித்திருந்தது.

 

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐக்கிய அரபு இராச்சிய வதிவிட வீசா மற்றும் செல்லுபடியாகும் டுபாய் வீசா வைத்துள்ள சுற்றுலாப்பயணிகள் இன்று (18) தொடக்கம் நிபந்தனைகளுடன் வர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தி பட்ஜட் கெரியா் விமானசேவை அறிவித்துள்ளது.

 

இது தவிர பயணிகள் வதிவி மற்றும் வௌிவிவகார தலைமையகத்தின் அனுமதி, ஆங்கிலம் அல்லது அரேபிய மொழியிலான, 48 மணி நேரத்திற்கு முதல் எடுக்கப்பட்ட QR குறியீட்டுடன் கூடிய பிசிஆர் எதிர்மறை பரிசோதனை முடிவின் பிரதி என்பனவும் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image