வௌிநாடு செல்ல முதல் தடுப்பூசி செலுத்த வேண்டுமா?

வௌிநாடு செல்ல முதல் தடுப்பூசி செலுத்த வேண்டுமா?

வௌிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்கள் கொவிட் 19 தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகப்பூர்வ இணையதளமான www.slbfe.lk இற்கு பிரவேசித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கவனமாக வாசித்து தேவையான ஆவணங்களை தரவேற்றம் செய்து பதிவு செய்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுதி பெற்றிருப்பின், தடுப்பூசி செலுத்தப்படும் திகதி, நேரம் என்பன பதிவு செய்தவரின் தனிப்பட்ட தொலைபேசிக்கு குறுந்தகவலூடாக அனுப்பப்படும்.

அதுவரை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் நாராஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை என்பவற்றுக்கு வருகைத் தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் அறியும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பணியகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image