பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
All Stories
அந்தந்த மாகாணங்களுக்கு உள்ளேயே தகைமை பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
உயர் கல்வியை தனியார் மயப்படுத்தும் - பாதுகாப்பு மயப்படுத்தும் முயற்சிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்களின் கைதுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைழகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக நேற்று (07) போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் சட்டமூலத்திற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதற்கமைய பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஹட்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் மஞ்சுள சுரவீர மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர் செல்வி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நலனுக்காக போராடும் தொழிற்சங்க தலைவர்களை இவ்வாறு அடக்குவது ஒரு நாட்டின் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும். எனவே அரசாங்கம் இவ்வாறான மக்கள் அடக்குமுறைகளை நிறுத்திக்கொள்வதுடன் நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் சட்டங்களையும் கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என்றும் சுந்திரலிங்கம் பிரதீப் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தகால ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சேவை சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
'தோட்டத் தொழிலாளர்களை அரசு கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது. நாட் சம்பளம் 1,000 ரூபா என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டுகொள்வது இல்லை. இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பில் இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும்.'
இலங்கை கடற்பரப்பில் அண்மையில் எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அத்தியவசிய உலர்உணவு பொருட்களை NUSS தொழிற்சங்கம் வழங்கியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி இலங்கை ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை இழந்தால், அது நாட்டின் உழைக்கும் பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும் ஆதலால், அது குறித்து ஐரோப்பிய ஆணைக்குழுவில் சமர்ப்பணங்களை மேற்கொள்ளுமாறு ஐந்து முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டனர்.
மறு அறிவித்தல வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட காணி விடயம் ஒன்றினை பார்வையிட சென்ற கிராம சேவகர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று (05) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.