தொழிற்சங்க தலைவர்களின் கைதுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கண்டனம்!

தொழிற்சங்க தலைவர்களின் கைதுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கண்டனம்!

உயர் கல்வியை தனியார் மயப்படுத்தும் - பாதுகாப்பு மயப்படுத்தும் முயற்சிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்களின் கைதுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைழகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக நேற்று (07) போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் சட்டமூலத்திற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதற்கமைய பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஹட்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் மஞ்சுள சுரவீர மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர் செல்வி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நலனுக்காக போராடும் தொழிற்சங்க தலைவர்களை இவ்வாறு அடக்குவது ஒரு நாட்டின் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும். எனவே அரசாங்கம் இவ்வாறான மக்கள் அடக்குமுறைகளை நிறுத்திக்கொள்வதுடன் நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் சட்டங்களையும் கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என்றும் சுந்திரலிங்கம் பிரதீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image