ஆசிரியர் நியமனம் தொடர்பில் புதிய நடைமுறை: கல்வி அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் நியமனம் தொடர்பில் புதிய நடைமுறை: கல்வி அமைச்சர் அறிவிப்பு

அந்தந்த மாகாணங்களுக்கு உள்ளேயே தகைமை பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்று (08) நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் தமது கேள்வியில், வெளி மாகாணங்களில் நியமனங்களை பெறும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேறு இடத்திற்கு இடமாற்றம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் ஏதாவது வேலைத்திட்டம் இருக்கின்றதா என வினவினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இது பிரச்சினையானது தான் எனக் குறிப்பிட்டார்.

வெளி மாகாணங்களில் நியமனங்களை பெறும் ஆசிரியர்கள் இயன்றளவு விரைவில் வேறு மாகாணத்திற்கு இடமாற்றம்பெற முயற்சிக்கின்றனர்.

இதற்கு தீர்வாக அந்த மாகாணத்திலேயே தகுதி பெற்றவர்களை அடையாளம் கண்டு ஆசிரியர் நியமனங்களை அந்த மாகாணத்துக்குள்ளேயே வழங்குவதற்கு நாங்கள் மிகவும் கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image