மலையகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் வேலைக்கு அனுப்பக்கூடாது என்றும், அதனையும் மீறி தொழிலுக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
All Stories
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பயிலுனர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருடன் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வியமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் டயகம பகுதி சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்தார்.
டெல்டா திரிபுடைய 35 பேர் வரை அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்த போதிலும் இதுவரை 250 பேர் வரை அடையாளங்காணப்பட்டிருக்கலாம் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் இன்று (19) தொடக்கம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் ஆகிய தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக்கோரி வைத்தியசாலை வளாகத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்றுக் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் கடமையாற்றும் தமக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செம்டம்பர், நவம்பர் மற்றும் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மேலதிகநேர கொடுப்பனவை மட்டுப்படுத்தி 60 மணித்தியாலங்கள் மாத்திரம் வழங்கி இருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
60 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் வேலைசெய்த நேரங்களுக்கான கொடுப்பனவை இதுவரை காலமும் தமக்கு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடையம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலமாகவும் தொழிற்சங்க அடிப்படையிலும் பணியாளர்கள் ஒன்றிணைந்து வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த 2 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை பணிப்பாளருக்கு அனுப்பி இருந்தோம். கடந்த 9 ஆம் திகதிக்கு முன்னர் சரியான முடிவை வழங்குமாறும், அவ்வாறு சரியான முடிவு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார சேவைகள் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றுக்காலை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தை தவிர வடக்கில் உள்ள ஏனைய மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கான மேலதிநேர கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டனர்.
எனவே, தமக்கு சரியான தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் தெரிவித்தனர்.
கொவிட் தடுப்பூசி மற்றும் கொவிட் அபாயக் கொடுப்பனவு வழங்கப்படாமை உட்பட கோரிக்கைகளை முன்வைத்து கொவிட் தடுப்புப் பணிகளில் இருந்தும் கிராமசேவகர்கள் விலகிக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் 12,000 கிராமசேவகர்கள் கடமையாற்றியபோதிலும் இதுவரை 1500 பேருக்கு மாத்திரமே இதுவரை கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டப்ளியு. ஜீ. கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
அரச தலையீட்டில் கிராம சேவகர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தத்தமது பிரசேதங்களில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் போதே மேற்கூறப்பட்ட 1500 கிராமசேவகர்கள் தடுப்பூசிகளை பெற்
அத்துடன் கொவிட் தடுப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு அரச அதிகாரிகளுக்கு கொவிட் அபாய கொடுப்பனவு வழங்குமாறு பல தடவைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிக்கு கடிதம் அனுப்பியபோதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் தடுப்பூசி வழங்குவதற்கான ஆவணங்களை தயாரித்து வழங்குவது தவிர அனைத்து கொவிட் தடுப்பு தொடர்பான செயற்பாடுகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளனர் என்றும் கித்சிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் கடந்த 5ம்திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்குவதற்கான ஆவணங்களை தவிரந்த அனைத்து கடமைகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.