ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
All Stories
016 - 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அரச சேவையாளர்களின் சட்ட உரிமையை வழங்குமாறே நாம் கோருகிறோம் என்று ஓய்வூதியம் பெறுவோரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வௌியிட்டு போட்டிப்பரீட்சை நடத்தி வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க ஆவணம் செய்யுமாறு அரசிடம் கோருவதாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் மஹேஸ் அம்பேபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான தோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் நீதிமன்ற உத்தரவையும் மீறி தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்டமைக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் வௌியிட்டுள்ளது.
பட்டதாரி பயிலுனர்கள் தொடர்பில் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாவட்ட செயலாளரை சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின்
20/21 பயிற்சியாளர்கள் சங்கம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
மாவட்ட செயலாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள ஐந்து முக்கிய கோரிக்கைகள் வருமாறு,
👉அனைத்து பயிற்சியாளர்களுக்கும் செப்டம்பர் 03 ஆம் திகதிக்ககு முன் நிரந்தரப் படுத்தப்பட வேண்டும்!
👉பாடசாலைகளில் இணைக்கப்பட்ட பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்குங்கள்!
👉சுகாதார அலுவலகங்களுடன் இணைக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை கொடுங்கள்!
👉அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சிறப்பு போனஸ் கொடுங்கள்!
👉 மாதாந்தத கொடுப்பனவை தாமதமின்றி தாருங்கள்!
⭕ஜூலை 12 முதல் மாவட்ட செயலாளர்கள்..
(20/21 பயிற்சியாளர்கள் சங்கம்)
- ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை உடன் கிழித்தொறியுமாறு கோரி கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணையவழி (Online) வகுப்புகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கமும் உடனடியாக இணையவழி கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால், புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் கோவை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் துறை பணியாளர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் நடைபெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
இணையவழி (Online) கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் இன்று முதல் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள்; தெரிவித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் விலக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலரை தனிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு தொழிற்சங்க தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.