போராட்டத்தில் ஈடுபடும் நிலையை அதிகாரிகளே ஏற்படுத்தினர்

போராட்டத்தில் ஈடுபடும் நிலையை அதிகாரிகளே ஏற்படுத்தினர்

சுகாதாரத்துறைசார் 14 தொழிற்சங்கங்களின் பணியாளர்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 

 
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட  மருத்துவ துறைசார் 14 தொழிற்சங்கங்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
 
தாதிய சேவையினரை மாத்திரம் விசேடமாக கவனித்தல், சம்பள முரண்பாட்டை நீக்குதல், சம்பள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பதவி உயர்வை முறையாக முன்னெடுத்தல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
 
கடந்த 3ஆம் திகதி முதல் இரண்டு நாட்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால், இன்று முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதாக மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை 8 மணிமுதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
 
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
 
எவ்வாறிருப்பினும், தெரிவுசெய்யப்படட சில வைத்தியசாலைகளில். அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image