கட்டாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான மன்னிப்பு காலம் (சலுகை காலம்) ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
அமீரக அரசானது வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 08 வரை என 09 நாட்கள் விடுமுறையை சமீபத்தில் அறிவித்ததிருந்தது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் உதவியை பெருவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட கணக்கொன்றை இன்று (12) ஆரம்பிக்கவுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஒன்பது மாத குழந்தையின் தாயை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு அனுப்பிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) மூன்று மாதங்களுக்கு மேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தாமதப்படுத்தினால் உடனடியாக தம்மிடம் முறைப்பாடுகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக SLFEB பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
கட்டாரில் பணி புரியும் தனியார்த் துறைப் பணியாளர்களுக்கான அதிக பட்ச பணி நேரங்கள் பற்றிய அறிவிப்பை கட்டாதர் தொழிற்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் சில விமானங்கள் சேவையிலிருந்து நிறுப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திடீரென முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானில் இடைக்கால தொழில்நுட்ப சேவை பயிற்சி நிமித்தம் சென்று மூன்று வருடம் பணியாற்றி திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக தலா 6 ஜப்பான் யென் (சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம்) வழங்கப்பட்டது.
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொழில் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியுள்ள கொரியா, இலங்கைக்கான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி ஒதுக்கீடுகளை அதிகரிக்கின்றதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் வௌிநாடு செல்லவுள்ளவர்கள் அவர்களுக்கான அறிவித்தலொன்றை சிவில் விமானசேவைகள் அதிகாரசபை அறிவித்தலொன்றை வௌியிட்டுள்ளது.
இலங்கை புலம்பெயர் ஊழியரான பிரியந்தவை கொடூரமான முறையில் கொலை செய்த 6 குற்றவாளிகளுக்கு லகூர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் 76 பேருக்கு தலா இரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களும் தமது எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வரும் வலையமைப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசேட குழுவொன்று டுபாய் சென்றுள்ளது.