மருந்து தட்டுப்பாட்டை நீக்க புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து நிதி சேகரிக்க புதிய கணக்கு!

மருந்து தட்டுப்பாட்டை நீக்க புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து நிதி சேகரிக்க புதிய கணக்கு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் உதவியை பெருவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட கணக்கொன்றை இன்று (12) ஆரம்பிக்கவுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை வௌிநாட்டுத் தூதரகங்களுக்கு வௌிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தௌிவுபடுத்தியுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கைக்கு அவசியமான அத்தியவசிய மருந்துவகைகள் 273 தொடர்பில் குறித்த தூதரகங்கள் தௌிவுபடுத்தியுள்ளன. அவசியமான நிதியுதவியினை வழங்க வௌிநாடுகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரதுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சிக்கு தீர்வு காணும் பொருட்டு கொவிட் 19 மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தில் மிகுதியாகவுள்ள பணத்தை பயன்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மத்திய வங்கி ஆளுநரிடம் அறிவித்துள்ளனர்.

 மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு குறித்த சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஷெனால் பிரணாந்து தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் மருந்து தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தற்போது நாட்டில் நிலவும் மருந்து நெருக்கடி தொடர்பில் அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயந்த பண்டார கருத்து தெரிவிக்கையில் 200 இற்கும் அதிகமான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image