கட்டாரில் தனியார் ஊழியர்களுக்கான வாராந்த பணி நேரங்களை குறைப்பு

கட்டாரில் தனியார் ஊழியர்களுக்கான வாராந்த பணி நேரங்களை குறைப்பு

கட்டாரில் பணி புரியும் தனியார்த் துறைப் பணியாளர்களுக்கான அதிக பட்ச பணி நேரங்கள் பற்றிய அறிவிப்பை கட்டாதர் தொழிற்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன் படி தனியார் துறை அலுவலகப் பணியாளர்கள் வாரம் ஒன்றிற்கு அதிக பட்சம் 36 மணித்தியாலங்கள் மாத்திரமே பணிக்கு அமர்த்தப்படவேண்டும் என்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாள் ஒன்றுக்கான பணி நேரம் 6 மணித்தியாலங்கள் என்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. கட்டார் பணியாளர் விதிக் கோவையின் 73ம் இலக்க சட்டத்தின் படி ரமழான் மாதத்தில்  பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு 6 மணித்தியாலங்கள் படி வாரத்திற்கு 36 மணித்தியாலங்கள் மாத்திரம் பணிக்கு அமர்த்தப்படவேண்டும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் ரமழான் அல்லாத காலங்களில் தனியார்த்துறை ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 8 மணித்தியாலங்கள் படி வாரத்திற்கு 48 மணித்தியாலங்கள் பணிக்கு அமர்த்தப்படவேண்டும் முடியும் என்பதாக கட்டார் தொழிற்துறை அமைச்சு தனது உத்தியோக பூர்வ தளத்தில் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கத்தார் தமிழ்
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image