வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார்.
All Stories
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக செலுத்தப்படும் ஊக்குவிப்புத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கொழும்பில் சென்ரல் பிளாசா கட்டிடத்தொகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த போலி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று நேற்று (03) சுற்றி வளைக்கப்பட்டதுடன் அதன் உரிமையாளர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள இலங்கைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக slbfe e connect என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உக்ரேன் - போலாந்து எல்லை வழியாக இரு மாணவர்கள் உட்பட 40 இலங்கையர்கள் வௌியேற்றும் பணிகளில் வர்சோவ் மற்றும் அன்காரா ஆகிய பிரதேசங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஈடுபட்டுள்ளநிலையில் உக்ரேன் நிலை தொடர்பில் இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று வௌிவிகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக அதன் சர்வதேச தொடர்புகள் குறித்த பிரிவின் தலைமை அதிகாரி ஜெ.பீ சாந்தசிரி தெரிவித்துள்ளார்.
கனடா உட்பட பல நாடுகளில் தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி இளைஞர் யுவதிகளிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள், போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேறும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அங்காராவிலுள்ள இலங்கை தூதரம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு (2022) ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள கொரிய மொழித் தேர்வுப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படவுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
பெலாரஸில் உயர்கல்வியை தொடரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் மொஸ்கோ வழியாக இலங்கை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த சுய தனிமைப்படுத்தல் முறையை அடுத்த வாரம் முதல் நீக்குவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கவனம் செலுத்தியுள்ளார்.
காரில் மறைந்திருந்து நாட்டின் எல்லையை கடக்க முற்பட்ட இரு இலங்கை குழுவினரை கைது செய்துள்ளதாக ரொமேனியா எல்லைப் பாதுகாப்புப் படையினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.