மத்திய கிழக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இலங்கைப் பெண்கள்

மத்திய கிழக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இலங்கைப் பெண்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வரும் வலையமைப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசேட குழுவொன்று டுபாய் சென்றுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் விசாரணைப் பிரிவினூடாக இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சில வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் இடைத் தரகர்கள் ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கைப் பெண்களை டுபாய், ஓமான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்ணாக தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.

சுற்றுலா வீசா ஊடாக டுபாய், ஓமான் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்தப் பெண்கள் விபசார விடுகளில் மற்றும் களியாட்ட விடுதிகள் உட்பட ஆட்கடத்தல் மற்றும் வியாபாரத்திற்குற்படுத்தக்கூடிய தொழிலில் ஈடுபடுத்தி தரகர்கள் இலட்சக்கணக்கான பணம் சம்பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், மனித வியாபாரம் மற்றும கடற்சார் குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டப்ளியு. எம். சமரகோனின் வழிகாட்டலில் குறித்த விசாரணை நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளன. அதேபோல், உஸ்பகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களை சுற்றுலா வீசா ஊடாக இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி செயற்பாடு தொடர்பில் குறித்த பிரிவு சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image