கூட்டு ஒப்பந்த சலுகைகளை இழக்கும் தோட்டத் தொழிலாளர்கள்!

கூட்டு ஒப்பந்த சலுகைகளை இழக்கும் தோட்டத் தொழிலாளர்கள்!

அடிப்படை சம்பளம் 900 ரூபாய் வரவு செலவு திட்ட நிவாரணம் 100 ரூபாயை சேர்த்து ஆயிரம் ரூபாய் நாட்சம்பளத்தை வழங்கும்படி முதலாளிமார் சம்மேளனம் சகல தோட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆயிரம் ரூபாய்க்கே ஊழியர் சேமலாப நிதி/நம்பிக்கை நிதி கழிவுகளை கணக்கிட கூறப்பட்டுள்ளது. 10% +12% +3% + அதன்படி 12%+3% இரண்டையும் சேர்த்து பார்த்தால் 1150 ரூபாய் வருகின்றது. 1000 ரூபாயில் 10% கழிவில் தொழிலாளி ஒருவருக்கு 900ரூபாயே கிடைக்கும். இது சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் என்பதால் தொழிலாளர்கள் ஏனைய சகல கொடுப்பனவுகளையும் இழக்கின்றனர்.

மேலதிக கொழுந்தை பறிக்க முடியாது. பறித்தாலும் அதற்கு கொடுப்பனவு இல்லை. ஆகவே நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் படி 25 நாட்கள் வேலைக்குச்சென்றாலும் அவர்களுக்கு கிடைப்பது 22,500ரூபாய் மாத்திரமே. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் இதை விட அதிகம் பெற்றனர் என்பதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை.

மேலதிக கொடுப்பனவு சலுகைகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட வேண்டி ஏற்படும்.அவை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவை. அதை சட்ட ரீதியில் எதிர்கொள்ள வேண்டும். ஆகவே மீண்டும் தொழில் அமைச்சர் ,தொழில் ஆணையாளரை நாட வேண்டிய தேவை உள்ளது. அப்படி நடந்தால் அதை கைத்தொழில் நீதிமன்றம் ஊடாக தீர்க்க முடியும் என்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி தோழர் தம்பையா. எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு. ஆனால் யார் அதை முன்னெடுக்கப்போகின்றனர் என்பதே கேள்வி.

Letter Estate

நன்றி- சிவலிங்கம் சிவகுமாரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image