தேயிலை தொழிற்துறை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

தேயிலை தொழிற்துறை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

நாட்டின் சுபீட்சத்தின் அடையாளமாகக் காணப்படும் தேயிலை கைத்தொழிலை வீழ்ச்சியடைய இடமளிக்காது பலமுடன் முன்னோக்கி செல்வதற்காக தேயிலை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இத்துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (07) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போது கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாதென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயத்தின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவேயாகும் என்று குறிப்பிட்டார்.

இறக்குமதியை கட்டுப்படுத்தி நாட்டில் பயிரிடக்கூடிய அனைத்து பயிர் வகைகளையும் பயிரிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது வெளிநாட்டு விவசாயிகளுக்கு சென்ற நிதியை எமது விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே ஆகும். பயரிடக்கூடிய அனைத்து நிலங்களையும் விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி விளைச்சளை அதிகரிப்பதற்கும் இளைஞர் சமுதாயத்தை இத்துறையில் ஊக்கப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்தமைக்கான காரணம் அரசாங்கம் முன்னெடுத்த சரியான வேலைத்திட்டங்களாகும். இன்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை காணக்கூடியதாக உள்ளதோடு, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்நாட்டின் சுபீட்சத்தின் அடையாளமாகக் காணப்படும் தேயிலை கைத்தொழிலை வீழ்ச்சியடைய இடமளிக்காது பலமுடன் முன்னோக்கி செல்வதற்காக தேயிலை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இத்துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image