பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடைவிதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிக்கத்துள்ளது.
All Stories
அரச நிர்வாக சேவையில், தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நுண் கடன் பெற்றவர்கள் அக்கடனை செலுத்துவதற்கு மாவட்டச் செயலகத்தினூடாக ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் கொட்டகலை சீ.எல்.எவ் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டு, நேற்று முதல் (01) புதிய சேவை நிலையங்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய செயல் ஒழுங்கு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று (31) தொடக்கம் தடை விதிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது அவற்றின் ஆரோக்கியம் குறித்து ஆராய திட்டமொன்றை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சாரபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை எதிர்வரும் 8ம் திகதி முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
தபால் திணைக்கள ஊழியர்கள் நேற்று (30) நள்ளிரவு தொடக்கம் சுகயீன லீவு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
தபால் சேவைக்கு புதிய ஊழியர்களை உள்வாங்கல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைதொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமான இன்றைய தினம் (31) நள்ளிரவு வரை 24 மணி நேரத்திற்கு முன்னெடுக்கப்படும் என்றும் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்டப்டுள்ளது. தபால் திணைக்களத்தின் இத்தீர்மானத்தையடுத்து விடுமுறை ரத்து செய்யப்பட்டபோதிலும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிற்சங்க செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் திட்டமொன்றை செயற்படுத்த அவசியம் உள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலை வர்த்தக நாமம், உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களின் சுகாதாரம், தொழிற்பாதுகாப்பு என்பவற்றை குறைத்த பெற்ற வருமானத்தில் பாரிய லாபத்தை உழைத்துக்கொண்டுள்ளன என்று தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
தொழிற்சங்கங்கள் சம்பள நிர்ணய சபையில் இருந்து விலகி, மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் எனக் கோரினால், அதற்கு தமது தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.