நாட்டுக்கு மேலும் 23 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
All Stories
நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாமல் 'இலங்கைக்கே உரித்தான புதிய திரிபு உருவாகும் வரை காத்திருக்காமல் நாட்டை முடக்காவிடின் முழு முடக்கத்திற்கு செல்வதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளன என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் மோசமான தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை இரு வாரங்களுக்கு பிற்போடவேண்டும் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலைய செயலாளர் தம்மிக்க முனசிங்க கோரியுள்ளார்.
நாளைமுதல் (16) நாளாந்தம் மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல், அதிகாலை 4 மணிவரை, நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
யடியாந்தோட்டை நாகஸ்தன்ன தோட்டத்திற்கு சொந்தமான 300 ஏக்கர் காணியை தனியாருக்கு விற்க முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றமை முன்னெடுத்துள்ளனர்.
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சருக்கு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கடிதமொன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
நாராஹேன்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஊழியர் நம்பிக்கை நிதிய தலைமையகம் தற்காலிகமாக மூடப்படடுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நிலைமை காரணமாக எதிர்வரும் வாரங்களில் நீதிமன்ற செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்ட மா அதிபருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு, பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொவிட்-19 தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 6,000 ஐ கடந்தது.
நாடு முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களுக்கு செல்லும் போது இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டமையை உறுதி செய்யக்கூடிய அட்டை வைத்திருப்பது அவசியம் என்று கொவிட் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி தொடக்கம் இப்புதிய முறை நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பு செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.