தோட்டக் காணியை விற்க முயற்சி - மக்கள் எதிர்ப்பு

தோட்டக் காணியை விற்க முயற்சி - மக்கள் எதிர்ப்பு

யடியாந்தோட்டை நாகஸ்தன்ன தோட்டத்திற்கு சொந்தமான 300 ஏக்கர் காணியை தனியாருக்கு விற்க முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றமை முன்னெடுத்துள்ளனர்.

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குரிய தோட்டமாக காணப்படும் இந்த நாகஸ்தன்ன தோட்டத்தில் சுமார் 300 ஏக்கர் காணியை விற்கும் முயற்சியின் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடரும் இந்த பிரச்சனையை முன்னிட்டு இவ்வாறான பல கவனயீர்ப்பு போராட்டங்கள் அத்தோட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

சீபொத் - கம்பளை வீதியின் ஹொரகொல பொலிஸ் காவலரணுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதாதைகளை ஏந்தி கோஷமிட்டு தமது தோட்ட காணியை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நாகஸ்தன்ன தோட்டத்தின் உதவி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தையும் இரத்து செய்ய வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமது இந்த கோரிக்கையை அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபை கவனத்தில் கொண்டு தமது தோட்ட காணியை வெளியாருக்கு விற்பதையும் தமது உதவி அதிகாரியை இடம் மாற்றம் செய்வதையும் உடன் நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் தமது போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெறும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image