அமைச்சரவை உபகுழுவை தனித்தனியாக சந்திக்கப்போவதில்லை - மஹிந்த ஜயசிங்க

அமைச்சரவை உபகுழுவை தனித்தனியாக சந்திக்கப்போவதில்லை - மஹிந்த ஜயசிங்க

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு நேற்று (12) அறிவித்ததாற்போல் எந்த காரணம் கொண்டும் தொழிற்சங்கங்கள் தனித்தனியாக கலந்துரையாடலுக்கு செல்லப்போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முகநூல் வழியாக வழங்கிய கருத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் அமைச்சரவை உபகுழு கூடி ஆசிரியர்கள் அதிபர்கள் தொடர்பாகக் கலந்துரையாடி கூட்டாக இணைந்து சில முடிவுகளை எடுத்திருப்பதனை யாவரும் அறிவோம்அதில் ஒரு விடயமாக தொழிற்சங்கங்களைத் தனித்தனியாக அழைத்துக் கலந்துரையாட இருப்பதாக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் பேச்சுவார்த்தைக்குத் தனித்தனியாகச் செல்லப் போவதில்லை. ஒற்றுமையாக அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்தே செல்வோம் ஒருமித்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானத்தை எடுப்போம்,ஏற்றுக் கொள்வோம் என்றார்.

நேற்றைய தினம் பல்வேறு தரப்பினரால் பேச்சுவார்த்தைக்குத் தனித் தனியாகச் செல்லவேண்டாம் எனக் கூறப்பட்டதாகவும் எவரும் எதுவித சந்தேகமும் கொள்ளவேண்டாம் தனியாக ஒருபோதும் செல்லப் போவதில்லை என்ற அவர்.உப குழு அமைக்கும் போதே அது தீர்வைத் தருவதற்காக அமைக்கப் படவில்லை எனவும் மாறாக போராட்டத்தைச் சிதைக்கவும் கால இழுத்தடிப்பை மேற்கொண்டு திசை திருப்பவும் என்பதை அறிவோம். அதனை உபகுழுவின் முதலாவது பேச்சுவார்த்தையே நிரூபித்துள்ளது.

சில ஆசிரியர்கள் தனியார் வகுப்புகள் நடத்துவது தொடர்பாகத் தன்னிடம் வினவினர் ஆசிரியர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினை உள்ளது இருப்பினும் இந்தப் போராட்ட காலத்தில் அதனைச் செய்ய முற்பட்டால் போராட்டம் சிதையும் ஆசிரியர்களாகிய நீங்களே சிந்தித்துப் பாருங்கள். .மொடியூல் தொடர்பாக அதனை நடத்துவோர் அதற்கு அழுத்தம் கொடுத்தாலும் எது வித அச்சமும் கொள்ள வேண்டாம்.

புதிதாகத் தேசியப்பாடசாலையாக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் zoom வழியாகவும் நேரடியாகவும் கல்வி அமைச்சோடு சம்மந்தப்பட்ட பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செய்ய வேண்டாம் அதனால் ஆசிரியர்களின் அதிபர்களின் போராட்டம் சிதையும். கம்பஹா மாவட்டத்தில் அதிபர் ஒருவர் உப அதிபர்களை பல்வேறு வலயமட்ட வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ள பலவந்தமாக அழைத்த சம்பவங்கள் அழுத்தம் கொடுத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image