கொவிட் தொற்று நீதிமன்ற செயற்பாடுகளில் தாக்கம்- சட்டத்தரணிகள் சங்கம்

கொவிட் தொற்று நீதிமன்ற செயற்பாடுகளில் தாக்கம்- சட்டத்தரணிகள் சங்கம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நிலைமை காரணமாக எதிர்வரும் வாரங்களில் நீதிமன்ற செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்ட மா அதிபருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சட்டத்துறை சார்ந்த 10 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை தொடர்பிலும் இக்கடிதத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் டெல்டா திரிபு வைரஸ் வேகமாக பரவி வருகின்றமையினால் தொற்றுக்குள்ளாகும் நபர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைக் கருத்திற்கொண்டு சில முன்மொழிவுகளையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

நீதிமன்ற பட்டியலை அமர்வுகளாகப் பிரித்தல் மற்றும் மிக அவசியம் என்றால் தவிர வழக்குகளின் போது பொது மக்களை நீதிமன்றத்திற்குள் தடை செய்தல் உட்பட 8 முன்மொழிவுகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதத்த்தில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image