அரசு நாட்டை முடக்காவிடின் நாம் முடக்க நடவடிக்கை - தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

அரசு நாட்டை முடக்காவிடின் நாம் முடக்க நடவடிக்கை - தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாமல் 'இலங்கைக்கே உரித்தான புதிய திரிபு உருவாகும் வரை காத்திருக்காமல் நாட்டை முடக்காவிடின் முழு முடக்கத்திற்கு செல்வதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளன என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ரவி குமுதேஷ் இக்கருத்தை வௌியிட்டுள்ளார்.

எதிர்வரும் (20) வௌ்ளிக்கிழமை நாடு முழுமையாக மூடப்படாவிடின் எதிர்வரும் (23) திகதி தொழிற்சங்க முடக்கத்திற்கு செல்ல அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராகவுள்ளன. விஞ்ஞானரீதியான முடக்கமாக வெற்றியளிக்கக்கூடிய வகையில் இம்முடக்கம் அமையும் இம்முடக்கத்தினூடாக அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தொழிற்சங்க முடக்கத்தினூடாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கும் விடயங்களாவன

19 நாட்களுக்கு விஞ்ஞான ரீதியான பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தல்
இக்காலப்பகுதயில் குறைந்தது ஒரு இலட்சம் PCR, ரெபிட் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளல்
தொற்றாளர்களை வேறுபடுத்துங்கள், சாதாரண நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை வழங்குங்கள்.
தொற்று அறிகுறிகளுடன் இடைத்தங்கல் சிகிச்சை பெறவேண்டியவர்களுக்காக ஒரு இலட்சம் கட்டில்களுடன் கூடிய இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தை அமைத்தல்.
அத்தியவசிய தேவைகளுக்காக 10,000 கட்டில்களை ஒதுக்கி வையுங்கள்.
விஞ்ஞான கண்காணிப்பின் மூலம் நோயை துல்லியமாக கணிக்க திட்டமிடுங்கள்
குறித்த காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதை தவிருங்கள்.
வௌிநாட்டிலிருந்து வருபவர்களுடைய தொற்றுத் திரிபு குறித்த கவனம் செலுத்துங்கள்.
நாட்டில் அடையாளங்காணப்படும் நோயாளர்களுடைய எண்ணிக்கைக்கமைய பச்சை, ஆரஞ்சு, சிவப்பு வலயங்களை அடையாளங்காணல், பச்சை மற்றும் ஆரஞ்சு வலயங்களை பாதுகாத்து மேம்படுத்தல்.
முடக்க காலப்பகுதியில் பொது மக்களின் தேவைகளை அரசாங்கம் என்ற ரீதியில் நிறைவேற்றுங்கள்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image