தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் அமைச்சரவை புதிய தீர்மானம்

தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் அமைச்சரவை புதிய தீர்மானம்

நாட்டுக்கு மேலும் 23 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 9 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளும், 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

அடுத்த மாதம் 30 ஆம் திகதியாகும்போது, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நிறைவுசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய, இந்தத் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு,

கொவிட் - 19 தொற்று நிலைமையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முதலில் 14 மில்லியன் சனத்தொகைக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2021 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஆகும் போது 19.49 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த தடுப்பூசி மருந்துகளில் 11.26 மில்லியன்கள் முதலாம் கட்டத்திற்கும் 3.25 மில்லியன்கள் இரண்டாம் கட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் - 19 தொற்று தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2021 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியாகும் போது தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதற்குத் தேவையான தடுப்பூசிகளை அமைச்சரவையின் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்ட அலகொன்றுக்கான விலையில் 09 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளையும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image