அரச, தனியார்துறை ஊழியர்களை சேவைக்கு அழைக்காதீர்கள்!

அரச, தனியார்துறை ஊழியர்களை சேவைக்கு அழைக்காதீர்கள்!

தற்போது நாட்டில் நிலவும் மோசமான தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை இரு வாரங்களுக்கு பிற்போடவேண்டும் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலைய செயலாளர் தம்மிக்க முனசிங்க கோரியுள்ளார்.

தற்போதை நாட்டின் நிலைமையை புதிதாக தௌிவுபடுத்த ​வேண்டிய அவசியமில்லை. இத்தகைய மோசமான நிலை நாட்டில் நிலவும் நிலையில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் பொது சேவைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஊழியர்களை சேவைக்கு சமூகமளிக்குமாறு சுற்றுநிருபம் வௌியிடுகின்றனர்.

அரச ஊழியர்கள் மாத்திரம் இல்லை தனியார் துறை ஊழியர்களும் கொவிட் தொற்றுக்கு அதிகளவு பலியாகின்றனர். எனவே காலம் தாழ்த்தாமல் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை செயற்படுத்தி மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தம்மிக்க முனசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image