மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
All Stories
பல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியரகளின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக ,மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான முழு அதிகாரமும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உள்ளதொன ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் ஐந்தாவது சரத்தின் பிரகாரம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான அதிகாரம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இல்லை என நேற்று (06) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி முன்வைத்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
துறைமுகத்துக்கு சொந்தமான நிலத்தை சீனாவுக்கு விற்க அரசாங்கம் முயல்வதாக துறைமுகத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்ங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் போடப்படடவுள்ள நிலையில் கற்றல் நடவடிக்கைகளில் அதிபர் ஆசிரியர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிடின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவிருந்த ஆசிரியர் கலாசாலை இறுதிப்பரீட்சை 2020/2021 மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையில் கல்வித் துறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்கான தீர்மானம் ஒன்றை அமைச்சரவை மேற்கொண்டுள்ளது.
2020/21 க்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மற்றும் பாடசாலைகளுடன் இணைக்கப்பட்ட பயிலுனர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளன.