முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் 'குரு அபிமானி' தேசிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
All Stories
ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் சேவை சங்கத்தினருக்கும் தபால் மா அதிபருக்கும் இடையில் நேற்று முன்தினம் (16) திணைக்களத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட B.1.617.2 என்ற டெல்டா கொரோனா வைரஸ் திரிபு தொற்றுறுதியான நபர்கள் முதல் முறையாக சமூகத்தில் கண்றியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தொழில் திணைக்களத்தில் சுருக்கெழுத்தாளர்கள் (தரம் III) பதவிக்கான ஆட்சேர்ப்புக்குரிய போட்டிப் பரீட்கசக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படவுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக்கப்பாடு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது, அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமன்றி அத்தியவசிய சேவைக்கு அழைக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் இடர்கால கொடுப்பனவை வழங்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.நேற்று (17) அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை பாராட்டுவதுடன் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அமைச்சின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமன்றி தற்போதைய இடர்நிலையை கருத்திற்கொண்டு அத்தியவசிய சேவைக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறோம்.
குறிப்பாக 2020/2021ம் ஆண்டுக்காலப்பகுதியில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு கொடுப்பனவாக 20,000 ரூபா மாத்திரமே வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு வேறெந்த கொடுப்பனவும் கிடைப்பதில்லை. எனினும் அவர்கள் சுகாதாரத்துறைசார் அலுவலகங்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம், ஆகிய இடங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கும் விசேட கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 2020ம் ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
"எங்களைக் கவனத்திற்கொள்ள யாருமில்லை. தயவுசெய்து எங்களைக் கவனத்தில் எடுத்து உதவி செய்யுமாறும், எங்களுக்கான வேலைத்திட்டத்தை அமைத்துத் தாருங்கள்."