All Stories
சமூக வலைதளங்களில் உரிமையாளர் இல்லாத கணக்குகள், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு வழிகளில் நாட்டிற்கும், மக்களுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை வேண்டுமென்றே உருவாக்கும் நபர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (8) தெரிவித்தார்.
எரிபொருளை இறக்குமதி செய்ய, சுத்திகரிக்க மற்றும் விநியோகிக்க தனியார் துறைக்கு அனுமதி வழங்கும் வாபஸ் பெறுமாறு அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து இலங்கை பெற்றோலிய (சிபிசி) தொழிற்சங்கங்கள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஓய்வூதியம் பெறுவோரின் நலன் கருதி இம் மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை எதிர்வரும் 10ஆம் திகதி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துளளார்.
கர்ப்பிணி (Risk) தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி மருந்தேற்றல் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரசவ விசேட வைத்தியர்கள் நிலையத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
நாட்டில் நாளாந்த கொவிட் 19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நடமாட்டத்தடையை 14ம் திகதி தளர்த்துவது பொருத்தமற்றது என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜூன் 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் என்பது பெருந்தோட்டங்களில் தொழிற்சங்களுக்கான புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் மாதமாகும. இந்த மாதத்தில் தொழிலாளர்கள் தாங்கள் அங்கம் வகிக்கின்ற தொழிற் சங்கங்களில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது புதிய தொழிற்சங்கத்தில் இணைந்து கொள்வதா? என்பது தொடர்பாக தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து அங்கத்துவ படிவத்தை முகாமைக்கு கையளிக்கின்ற மாதமாகும்.
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் தனியார்த்துறை ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், தனியார் ஊழியர்கள் மத்திய நிலையம் உள்ளிட்ட 18 தொழிற்சங்கங்கள், தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு அறியப்படுத்தியுள்ளன.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது.