எங்களைக் கவனிக்க யாருமில்லை: வீட்டுப்பணியாளர்களின் துயர்கதை

எங்களைக் கவனிக்க யாருமில்லை: வீட்டுப்பணியாளர்களின் துயர்கதை

"எங்களைக் கவனத்திற்கொள்ள யாருமில்லை. தயவுசெய்து எங்களைக் கவனத்தில் எடுத்து உதவி செய்யுமாறும், எங்களுக்கான வேலைத்திட்டத்தை அமைத்துத் தாருங்கள்."

என்று ஹட்டன் தரவளை தோட்டத்தைச் சேர்ந்த ப்ரடெக்ட் (PROTECT UNION) அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வீட்டுப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தொழில் வாய்ப்புகள் இல்லாதுபோயுள்ளமையாலும், எவரும் உதவி செய்யாதமையாலும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள துன்ப நிலை குறித்து எமது இணையதளத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

நான் 13 ஆண்டுகளாக வீட்டுப் பணியாளராக வேலைசெய்கின்றேன். எனது கணவருக்கும் தொழில் செய்ய முடியாது. கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அன்றாடம் கிடைக்கும் கூலி வேலையை செய்கின்றார்.

இப்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டு வேலைகளை செய்ய முடியாத நிலை உள்ளது. எங்களைக் கவனிப்பதற்கும் யாருமில்லை. எங்களை சங்கமோ, நிறுவனமே, கட்சியோ அல்லது ஜனாதிபதியோ என எவருமே கவனிப்பதில்லை.

நாங்கள் அன்றாடம் வேலையின்றி மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகின்றோம். எங்களைக் கவனத்திற்கொள்ள யாருமில்லை. தயவுசெய்து எங்களைக் கவனத்தில் எடுத்து உதவி செய்யுமாறும், எங்களுக்கான வேலைத்திட்டத்தை அமைத்துத் தருமாறும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image