தபால் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தபால்மா அதிபருடனான பேச்சு தோல்வி

தபால் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தபால்மா அதிபருடனான பேச்சு தோல்வி

தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் சேவை சங்கத்தினருக்கும் தபால் மா அதிபருக்கும் இடையில் நேற்று முன்தினம் (16) திணைக்களத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.



எனினும், சில விடயங்கள் தொடர்பில் இதன்போது இணக்கப்பாட்டை எட்ட முடியாதுபோனதாக சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


01. உப தபால் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு முறைமையில் கீழ்வரும் திருத்தங்களை மேற்கொள்ளல்.

மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பை பிரதேச செயலகப் பிரிவுகள் அடிப்படையில் மேற்கொள்ளல்.

ஆட்சேர்ப்பின்போது பயிலுனர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 30வரை குறைத்தல்.

புள்ளி வழங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ள காலத்தை 10 ஆண்டுகள் வரை நீடித்தல்.

குறைந்தபட்ச தலகைமைக்கு மாத்திரம் புள்ளி வழங்குதல்.

02. மண்டல தரத்தில் இடமாற்றம் வழங்கப்படும்போது கோரிக்கை விடுக்கும் நபர் தாம் சேவையாற்றும் இடத்தில் ஆகக்குறைந்தது இரண்டு ஆண்டுகள் சேவையாற்றி இருத்தல் வேண்டும்.

03. உதவி அதிகாரிகள் பதவிக்கான நேர்முகத் தேர்வில் நாளொன்றுக்கு 15 பேர் வீதம் அழைப்பதற்கு சுகாதாரப் பிரிவினரின் அனுமதியைப் பெற்று அதை முன்னெடுத்தல்.

04. இதன்போது எந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டாலும், இடமாற்றம் வழங்கப்படும் சட்டரீதியான முறைமையை தவிர்த்து சிலரது தேவை கருதி சிரேஷ்டத்துவம் மற்றும் ஏனைய தகைமைகளை கருத்தில் கொள்ளாது பதில் நியமனங்களை வழங்குதல் மற்றும் இடமாற்றத்தை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

05. தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் காரியாலயங்களில் பணியாற்றும்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் விடயங்களையும் முன்வைத்துள்ள நிலையில், குறிப்பாக பணியாளர்கள் சேவைக்கு சமூகமளிக்கும் போது ஏற்படுகின்ற போக்குவரத்து செலவு மற்றும் பெற்றுக் கொண்டுள்ள ஏனைய பிரதிபலன்கள் அனைத்தும் இல்லாது செய்யப்பட்டுள்ளமையால், பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதால், அதற்காக நிவாரணம் வழங்குமாறு கோரப்பட்டதுடன், இது குறித்து ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை வழங்குவதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

06. காரியாலயங்களுக்கு விநியோகிக்கப்படும் தொற்று நீக்கி திரவம் உப தபால் காரியங்களுக்காக உரிய முறையில் வழங்கப்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச நிர்வாகத்தினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

07. கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகும் தபால் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தபால் ஊழியர்களுக்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பிலான கோரிக்கைக்கு திருப்தி அடையக் கூடிய பதில் கிடைக்கவில்லை.

08. தபால் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கும் விடயம் தொடர்பில் தலையீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன் இதுகுறித்து தொழிற்சங்கங்கள் தங்களது கவலையை தெரிவித்துள்ளன.

09. கடன் தவணையை அறவிடுவது தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டதுடன் இந்த விடயம் தொடர்பில் தலையீடு செய்யுமாறும் கோரப்பட்ட நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக தபால் மா அதிபர் தெரிவித்தார்.

10. உப தபால் காரியங்களுக்காக பணத்தைக் கொண்டு செல்லும் போது அவசியத் தன்மைக்கு அமைய தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதற்கு தபால் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11. அத்தியாவசிய பணிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் தவிர்ந்த ஏனைய ( அத்தியாவசிய கொடுப்பனவுகள் வழங்குதல், COD, speed, ems பொதிகள் வழங்குதல் மற்றும் ஔடதங்களை விநியோகித்தல்) பணிகளை மேற்கொள்வதற்கு இதுவரையில் அறிவுறுத்தப்படவில்லை என்றும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அழுத்தங்களைப் பிரயோகித்து உத்தியோகத்தர்களிடம் சேவையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் சில உத்தியோகத்தர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட்டால் அது குறித்து பிரச்சினை இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

12. பயிலுனர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு முயற்சிக்கபட்டுள்ள போதிலும் இதுவரையில் அதனை செய்ய முடியாது போயுள்ளதாகவும், அதுகுறித்து நிரந்தரமாக்க பணிக்குழாமினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

13. வெளிநாட்டுப் பிரிவு அதிகாரியின் சேவையின் திருத்தங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் வரையில் அதிகாரியின் ஆலோசனையின்படி செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image