இலங்கையில் அதிகரிக்கும் வேலையில்லாதோர் பிரச்சினை

இலங்கையில் அதிகரிக்கும் வேலையில்லாதோர் பிரச்சினை

இலங்கையில் 2020ம் ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு தசாப்தகாலத்தில் அதிகரித்துள்ள மிக கூடிய சதவீதம் இதுவாகும் என்று தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய வேலையில்லாதோர் பிரச்சினை நிலவுவதாகவும் அம்மாவட்டத்தில் 7.9 வீத வேலையின்மை பிரச்சினை காணப்படுவதாகவும் தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதேகடந்த 2020 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வேலையின்மை விகிதம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிக உயர்ந்ததை எட்டியுள்ளது, இது 7.9 சதவீதமாக உள்ளது. குறைந்த அளவான வேலையின்மை பிரச்சினை புத்தளம் பிரதேசத்தில் காணப்படுவதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

திணைக்களத் தரவுகளுக்கமைய இலங்கையில் வேலையில்லாததோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.46 மில்லியன் ஆகும். இது கடந்த 2019ம் ஆண்டை விட சற்று குறைந்த எண்ணிக்கையாகும். 2019ம் ஆண்டு தரவுகளின் படி வேலையில்லாதோர் எண்ணிக்கை 8.59 மில்லியன் ஆகும்.

தகுதியுள்ளவர்களிடையே அதிகளவு வேலையின்மை பிரச்சினை காணப்படுவதாக அத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image