பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபர்கள், உப அதிபர்கள் உள்ளிட்ட நிர்வாகத் துறையினருக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் செலுத்துவதற்காக, 279,020 கொரோனா தடுப்பூசிகள் அவசியமாகவுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
All Stories
தொழிலற்ற பட்டதாரிகளின் மேன்முறையீடுகள் தற்போது ஆராயப்பட்டுவருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாகாண சபை வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் 4 மணிநேர தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை - வட்டகொடை தோட்டத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று கள உத்தியோகத்தர் ஒருவருக்கு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடாத்தியதன் விளைவாக தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.
பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில்வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி, ஒருவார இணையத்தள எதிர்ப்பு போராட்டம் பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்குக – ஒருவார இணைய எதிர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்க நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பளம் 25 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
சிறுவர்களை வேலையில் அமர்த்துவதற்கான வயது 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித வித்யாபத்திரன தெரிவித்துள்ளார்.
இதுவரை 14 ஆக இருந்த வயதெல்லையே தற்போது 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
16-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி, ஒழுக்க வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையான தொழில்களில் மாத்திரம் ஈடுபடுத்த முடியும் என்று அதிகாரசபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களை பாதுகாப்பற்ற, இரவு பணிகளில் ஈடுபடுத்த முடியாது. அதேபோல் பிள்ளைகளை யாசகத்திற்கு பயன்படுத்தும் பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் 228 சரத்தின் கீழ் 5 வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். பிள்ளைகளை வீதியோர வியாபாரங்களில் ஈடுபடுத்துதல், சர்க்கஸ் உட்பட பொழுதுபோக்கு விடயங்களுக்கு பயன்படுத்தி பணம் சம்பாதித்தல், பிள்ளைகளூடாக போதைபொருள் மற்றும் மது விற்பனை மேற்கொள்ளல், விபசாரத்திற்கு பயன்படுத்தல் போன்ற குற்றங்கள் சட்டப்படி குற்றம் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சைபர் தொழில்நுட்பத்தினூடாக பிள்ளைகளை விற்பனை விடயங்களுக்கு பயன்படுத்துதலும் குற்றமாகும்.
எந்தவொரு இடத்திலும் 16 வயதுக்கு குறைந்த குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதை கண்டால் அல்லது 16- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அபாயகரமான, பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை கண்டால் அல்லது கேள்விப்பட்டால் உடனடியாக தேசிய சிறுவர் அதிகாரசபையின் 1929 என்ற உடனடி இலக்கத்திற்கு அல்லது 1929 சிறுவர் பாதுகாப்பு செயலிக்கு தெரியப்படுத்துமாறும் அதிகாரசபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.