தொழிலற்ற பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆய்வு காலம் அறிவிப்பு

தொழிலற்ற பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆய்வு காலம் அறிவிப்பு

தொழிலற்ற பட்டதாரிகளின் மேன்முறையீடுகள் தற்போது ஆராயப்பட்டுவருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் இந்த மாதம் மேன்முறையீட்டு ஆய்வுகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வினவுவதற்காக ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க ஆகியோர் பொது நிர்வாக அமைச்சு இன்று சென்றிருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ஒன்றிணைந்த ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் குறித்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்

தகுதி பெற்றுள்ளபோதும் இதுவரையில் நியமனம் கிடைக்கப்பெறாத தொழிலற்ற பட்டதாரிகளின் பெயர்பட்டியல் அல்லது விண்ணப்பம் கோரப்பட்டு மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் பட்டியல் பொது நிர்வாக அமைச்சுக்கு ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து வினவுவதற்காகவே இன்று நாங்கள் அமைச்சுக்கு சென்றோம்.

தொழிலற்ற பட்டதாரிகளின் மேன்முறையீடு கோரப்பட்டுள்ள, நியமனம் கிடைக்கப்பெற வேண்டியவர்களின் பட்டியல், வெளியிடப்படவேண்டியவர்களின் பிரச்சினை விடயத்தில் அவர்களின் மேன்முறையீடு ஆராயப்படுவதாகவும், இந்த மாதத்திற்குள் அது நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த மாதம் அவர்களுக்கான நியமனம் கடிதம் கிடைக்கப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்ற அடிப்படை தங்களது கோரிக்கையாக இருந்தது
என ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image