தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2021 நவம்பரில் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
All Stories
அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார்.
53,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கும் ஒரே தினத்தில் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் கோரியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் 51,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத் துறைகளில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட முதலாளிமார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (22) நள்ளிரவு தொடக்கம் பொதிகள் பொறுப்பேற்பதை நிறுத்தப்போவதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு தொழில் ஆணையாளரை அறிவுறுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மின்சாரத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21) காலை 08 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
'இப்போதுதான் தொழிற்சங்க ஆட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி போக, போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அக்கரபத்தனை பிளான்டேசனால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாகவே அமையும்.' - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.