அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவைக் கொடுப்பனவு தொடர்பாக

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவைக் கொடுப்பனவு தொடர்பாக
சில அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என தமது சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் அந்த சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
இதுகுறித்து அரச சேவைகள் அமைச்சிற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அறியப்படுத்தி உள்ளதாகவும் அந்த சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • அனர்த்த முகாமைத்துவ திணைக்களம்
  • சமூக சேவைகள் திணைக்களம் 
  • உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
  • உர உற்பத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சு
  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் 
  • பதிவாளர் திணைக்களம்
  • வர்த்தக அமைச்சு
 
டிசம்பர் மாத நிலுவை கொடுப்பனவு கிடைக்கப்பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அது தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் தமது சங்கத்திற்கு அறியப்படுத்துமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image