ஐக்கிய இராச்சியத்தில் அதிகரித்து வரும் சுகாதாரத்துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
All Stories
பட்டதாரி பயிலுநர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரயோசனமற்ற முதலீட்டின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு சொந்தமான 530 கோடி ரூபா கடந்த வருடம் இழக்கப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க இலங்கை சுதந்திர ஊழியர்கள் சங்கம் ஊழியர்களுக்கு 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு உட்பட 11 கோரிக்கை விமான நிலைய நிருவாக அதிகாரிகளுக்கு முன்வைக்க தீர்மானித்துள்ளது.
நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்ற ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த அபிருத்தி அதிகாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் (13) திகதி காலை 11.30 மணிக்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தௌிவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலை சீரடையும் வரையில் ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவது சாத்தியமில்லை என்று தனியார் துறை நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் மின்சார துண்டிப்பினை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான IIவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2015(II)2019 இற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.