சொலிடேரிட்டி சென்டர் (Solidarity Center ) அமைப்பினால், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்குதொழில் சட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ZOOM தொழில்நுட்பம் ஊடாக மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்திசெய்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (18) யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
All Stories
51,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
'பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை.' - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பலநோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உதவியாளர்கள் 54 பேர் முல்லைத்தீவு மாவட்ட வங்கியில் இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
அரச சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இடமாற்ற பிரச்சினை காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை, 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வு பெறுவோரின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு உள்ள அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதற்காக நிறுவக பிரதானியின் அனுமதி கட்டாயமாகுமென அரச சேவை அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.இரத்தினசிறி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தற்போது, 30 ஆயிரம் அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஒருநாள் பயிற்சி நேற்று (16) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.