பொதிகள் பொறுப்பேற்பதை நிறுத்தப்போவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

பொதிகள் பொறுப்பேற்பதை நிறுத்தப்போவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

இன்று (22) நள்ளிரவு தொடக்கம் பொதிகள் பொறுப்பேற்பதை நிறுத்தப்போவதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று நள்ளிரவு தொடக்கம் தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள பொதிகளை விநியோகித்தல், ரயில் நிலையங்களில் பொறுப்பேற்கப்பட்டுள்ள பொதிகளை கொண்டு செல்லல் மற்றும் வழிகாட்டுதல் அலுவலகங்களின் பணிகள் என்பன முன்பு போலவே நடைபெறும் என்றும் இன்று நள்ளிரவு தொடக்கம் புதிய பொதிகள் பொறுப்பேற்கப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெற்றிடங்களில் காணப்படும் பிரச்சிகைள், தாமதிக்கப்படும் பதவியுயர்வு மற்றும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க அவசியமான கல்வித் தகமை போன்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, திணைக்களத்தினுல் உள்ளக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image