இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால், இந்தியாவுக்கு பலஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆடைகளுக்கான முன்பதிவுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் வாக்களித்தது அவர்கள் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும், சொத்துக்களையும், வாழ்க்கையும் சூரையாடி செல்வதற்கு இல்லை. எமக்கு எமது பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதற்காகவே இன்றைக்கு நாம் பாதைக்கு இறங்கயுள்ளோம் என்று 'ப்ரொடெக்ட்' சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.
பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்கள் 139 நாட்களுக்கு தினமும் ஒரு மணித்தியாலம் மேலதிக கற்பித்தல் நேரத்துடன் கற்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களினால் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசாங்கத்தையும் மற்றும் அரசாங்கத்தின் கொள்கையையும் விமர்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிஉயர் தரத்துக்கு பதவியுயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை - 2019 (2021), 40% இணை விட அதிகமாக புள்ளிகளைப் பெற்ற 913 விண்ணப்பதாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
முழுமையான பெயர்ப்பட்டியல் இங்கே
ஏப்ரல் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் பொது விடுமுறை வழங்கப்பட்டமைக்கான காரணத்தை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று (09) இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சுதெரிவித்துள்ளது.