இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
All Stories
கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (19) பல பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை என பஸ் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கொவிட் 19 பரவும் ஆபத்து உள்ளமையினால் பெரியவர்கள் குழந்தைகளை சனநெருக்கடியுள்ள ஆர்ப்பாட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டாம் என்று சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று (18) முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் போராட்டத்தினை தடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக கொடுப்பனவை வழங்குதல் தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
இன்று(19) மற்றும் நாளைய(20) தினங்களில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடன் செலுத்தவேண்டியவர்களாக உள்ளனர் என்று முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் 2022 நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் இங்கே தரப்பட்டுள்ளன.
அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு கல்வியியற் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவை 10,000 ரூபா வரை அதிகரிக்குமாறு கல்வி சாரா ஊழியர் சங்கம் ஊழியர்கள் சங்கம் கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரோவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக எழும்பியுள்ள மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.