எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது சட்ட ரீதியான உரிமைகளை பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளை கைவிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
All Stories
இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை அகதிகளுக்கு, தற்காலிக புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி, இயக்குவதற்கான யோசனை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றி உள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தில் கைவைக்காதீர் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு இருக்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள், கேள்வி - பதில் மூலம் இங்கே விளக்கமாக தரப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவையின் இடமாற்றத்திற்கான விண்ணப்பப்படிவங்கள் கோருல் நிகழ்நிலை முறைமை ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது.
வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணித்தார்.