சித்திரைப் புத்தாண்டில் மின்தடை அமுலாகுமா? வெளியானது அறிவித்தல்

சித்திரைப் புத்தாண்டில் மின்தடை அமுலாகுமா? வெளியானது அறிவித்தல்

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாட்டில் மின்தடை அமுலாகுமா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் நாட்டில் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 
இதேவேளை, வார இறுதியில் (9, 10) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
 
அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
 
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
 
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலம் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
</div>
 
<hr>

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image