ப்ரொடெக்ட் சங்க வீட்டுப் பணியாளர்கள் ஹட்டனில் போராட்டம்

ப்ரொடெக்ட் சங்க வீட்டுப் பணியாளர்கள் ஹட்டனில் போராட்டம்

நாம் வாக்களித்தது அவர்கள் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும், சொத்துக்களையும், வாழ்க்கையும் சூரையாடி செல்வதற்கு இல்லை. எமக்கு எமது பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதற்காகவே இன்றைக்கு நாம் பாதைக்கு இறங்கயுள்ளோம் என்று 'ப்ரொடெக்ட்'  சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.


இலங்கை வீட்டு பணியாளர் சங்கமான 'ப்ரொடெக்ட்'  சங்கம் ஏற்பாடு செய்திருந்த அரசுக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஹட்டனில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

P7.jpg

நாம் வறுமை, பசி, பட்டினி என்பவற்றை அனுபவித்து வந்தாலும் எமது நாடடு ஜனாதிபதி அதைக் கண்டுக் கொள்ளவும் இல்லை எமக்கு அவர் உறையாற்றவும் இல்லை.

எதிர்காலத்தில் நாமும் எமது பிள்ளைகளும் கடனாளியாக வாழ முடியாது எம்மிடம் இருந்து திருடப்பட்ட பணம் திரும்ப தரப்பட வேண்டும். அத்துடன் அத்தியவசிய பொருட்களின் விலை இமாலய உயரத்திற்கு உயர்ந்து கொண்டு செல்லின்றது இந்நிலையில் சாதாரண மக்களாகிய நாம் எவ்வாறு வாழ்வது என்று கேள்வி எழுப்பினார்.

P10.jpg

எல்லா அரசியலவாதிகளும் சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி அது தொடர்பாக அவர்கள் பாராளுமன்றித்தில் விவாதித்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எம்மிடம் வாக்கு வாங்கிய எந்த ஒரு அரசியல்வாதியும் எம் நிலையை கண்டுக் கொள்ளாமல் அவர்களின் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

P4.jpg

அடுத்த தேர்தலில் தாம் எந்த கட்சியுடன் எந்த பகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பேரம் பேசுதலில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த பகடைகாய் விளையாட்டுக்கு இனியும் நாம் பலியாக போவதில்லை, ஓட்டு போட்ட எமக்கு உங்களிடம் கேள்வி கேட்பதற்கு உரிமை உண்டு. எனவே நாம் கேள்வி கேட்போம் என்றார்.

மேலும் இலங்கையை சோமாலியா ஆக்க இடம் தரம் முடியாது, அரிசிக்கும் பருப்பிற்கும் எங்களால் வரி செலுத்திக் கொண்டு இருட்டில் இருக்க முடியாது. இந்நிலையை எமது அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வெண்டும். இல்லாவிட்டால் இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

P2.jpg

ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு ஊர்வலம் பிரதான வீதியூடாக அட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தை அண்மித்ததும் அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சுமார் 100ற்கும் மேற்பட்ட வீட்டு பணியாளர்கள் கலந்துக் கொண்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நிறைவுற்றது.

P1_1.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image