இன்றைய மின வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்றைய மின வெட்டு தொடர்பான அறிவித்தல்

மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று (09) இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A, B, C, P, Q ஆகிய மண்டலங்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் D,E,F,R,S மண்டலங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G,H,I,T,U மண்டலங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் J,K,L மண்டலங்களுக்கு இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் V, W மண்டலங்களுக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.

எவ்வாறாயினும் CC-1 வலயத்தில் காலை 6 மணி முதல் 9:30 மணி வரை மூன்றரை மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 13.14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் நேற்று (08) தெரிவித்துள்ளன.

மேலதிக கற்பித்தல் நேரம் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image